புதுச்சேரி

முத்துரத்தின அரங்கம் பள்ளியில் நடந்த என்.எஸ்.எஸ். சிறப்பு முகாமை கலெக்டர் வல்லவன் தொடங்கி வைத்த காட்சி.

என்.எஸ்.எஸ். 7 நாள் சிறப்பு முகாம்

Published On 2023-09-21 14:53 IST   |   Update On 2023-09-21 14:53:00 IST
  • கலெக்டர் வல்லவன் தொடங்கி வைத்தார்
  • பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களும் செய்தி ருந்தனர்.

புதுச்சேரி:

புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் 7 நாள் சிறப்பு முகாம்  தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக புதுவை மாவட்ட கலெக்டர் வல்லவன் கலந்துகொண்டு முகாமினை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

சிறப்பு விருந்தி னர்களாக மாநில அளவிலான நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கி ணைப்பாளர் சதீஷ்குமார், பள்ளி அளவிலான நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு நாட்டு நல பணித்திட்ட சீருடை மற்றும் குறிப்பேடுகள் வழங்கி னார்கள்.

புதுச்சேரி மாநில கோஜுரியோ கராத்தே சங்க மாநிலச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் வாழ்த்துரை வழங்கினார்.

மேலும் கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரியில் பயில உள்ள மாணவர் நாகதேவாவுக்கு ஸ்டெதஸ்கோப் வழங்கினார்.

ரத்தினவேல் காமராஜ், ரங்கநாயகி வளவன் முன்னிலை வகித்தனர்.

பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், பள்ளியின் துணை முதல்வர் வினோலியா பள்ளியின் ஆலோசகர் ரத்தின பிரியா அருண்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை பள்ளியின் நாட்டு நல பணித்திட்ட அலுவலர் ஜெயந்தி, பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின் மற்றும் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களும் செய்திருந்தனர்.

Tags:    

Similar News