சுல்தான்பேட்டையில் ரூ.12.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய மின்சார டிரான்ஸ்பார்மரை சிவா எம்.எல்.ஏ. இயக்கி வைத்த போது எடுத்த படம்.
புதிய டிரான்ஸ்பார்மர்-சிவா எம்.எல்.ஏ. இயக்கி வைத்தார்
- ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் 3 ஸ்டார் நகரில் புதியதாக மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு அதன் இயக்க நிகழ்ச்சி நடந்தது.
- இந்த நிகழ்ச்சியில், மின்துறை உதவி பொறியாளர்கள் முருகேசன், பாலமுருகன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் தொகுதிக்கு ட்பட்ட சுல்தான்பேட்டை புது மேட்டுத்தெரு விரிவாக்கம், அப்துல்கலாம் நகர், 3 ஸ்டார் நகர், 5 ஸ்டார் நகர், ஜாக்கீர் உசேன் நகர், சஃபா நகர், ரஹ்மத் நகர் ஆகிய பகுதியில் நிலவி வந்த குறைந்த மின் சப்ளை மற்றும் அடிக்கடி ஏற்படும் மின் தடை பற்றாக்குறையை போக்கிட ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் 3 ஸ்டார் நகரில் புதியதாக மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு அதன் இயக்க நிகழ்ச்சி நடந்தது.
இதில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், தொகுதி எம்.எல்.ஏ.வுமான சிவா கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட மின்சார டிரான்ஸ்பார்மரை மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மின்துறை உதவி பொறியாளர்கள் முருகேசன், பாலமுருகன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், கூட்டணி கட்சித் தலைவர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், ஜமாத் முக்கிய ஸ்தர்கள், ஊர் பொதுமக்கள் வியாபார சங்க நிர்வாகிகள், வியாபாரிகள் கலந்து கொண்டனர்.