புதுச்சேரி

 மணக்குள விநாயகா் பள்ளிக்கூடத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்த போது எடுத்த படம்.

மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தில் புதிய பள்ளிக்கூடம்

Published On 2023-04-18 14:12 IST   |   Update On 2023-04-18 14:12:00 IST
  • முதல்-அமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார்.
  • மணக்குள விநாயகர் கல்விக்குழுமம் சிறப்பாக பணியாற்றி வருகிறது

புதுச்சேரி:

மதகடிப்பட்டில் மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தில் புதிய பள்ளிக்கூடத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார்.

புதுவை மணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளை சார்பில் மதகடிப்பட்டு மடுகரை சாலையில் மணக்குள விநாயகர் (எஸ்.எம்.வி.) என்ற பெயரில் புதிய பள்ளிக்கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது.

விழாவிற்கு தக்கஷீலா பல்கலைக்கழகத்தின் வேந்தரும், மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தின் தலைவரும், மேலாண் இயக்குனருமான தனசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் டாக்டர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து புதிய பள்ளிக்கூடத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தரமான கல்வி வழங்குவதில் மணக்குள விநாயகர் கல்விக்குழுமம் சிறப்பாக பணியாற்றி வருகிறது. கல்வி என்பது சுமையல்ல, அது சுவை என்று சொல்லும் அளவுக்கு சுற்றுச்சூழலை உருவாக்கி மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுப்பதுடன் உயர் கல்வியையும் கொடுக்கும் அளவுக்கு கல்லூரி வளர்ச்சி அடைந்துள்ளது.

இது புதுவைக்கு பெருமை சேர்ப்பதாகும். தொழில் நிறுவனங்கள் புதுவையில் தொழில் தொடங்க வரும் போது தங்கள் பிள்ளைகளை இந்த பள்ளியில் சேர்ப்பதற்கும், எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் தரமான கல்வியை மணக்குள விநாயகர் கல்வி நிறுவனம் வழங்கி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார். விழாவில் மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியின் இயக்குனரும், முதல்வருமான வெங்கடாசலபதி, மணக்குள விநாயகர் மருத்துவக்கல்லூரி இயக்குனர் டாக்டர் ராஜகோவிந்தன், மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப்டெக்னாலஜி கல்லூரியின் முதல்வர் மலர்க்கண், பல்லவா கல்வி குழுமங்களின் தலைவர் முத்து, மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியின் பதிவாளர் அப்பாஸ் மொய் தீன், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், அகாடமி டீன்கள் அன்புமலர், அறிவழகர், வேல் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த பள்ளியில் 2023-24-ம் கல்வியாண்டில் எல்.கே .ஜி. முதல் 8-ம் வகுப்புகள் வரை தொடங்கப்பட்டு உள்ளன.

Tags:    

Similar News