புதுச்சேரி

நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளி ஆண்டு விழாவில் பள்ளி குழந்தைகளுக்கு பட்டங்கள் வழங்கி கவுரவித்த காட்சி.

நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளி ஆண்டு விழா

Published On 2023-04-01 12:33 IST   |   Update On 2023-04-01 12:33:00 IST
  • புதுவை தந்தை பெரியார் நகர் நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளி ஆண்டு விழா புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்க மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
  • புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் வாழ்த்துரை வழங்கினார்.

புதுச்சேரி:

புதுவை தந்தை பெரியார் நகர் நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளி ஆண்டு விழா புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்க மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி இணை பேராசிரியர் டாக்டர் மதுசுதன் மற்றும் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வளவன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.

சிறப்பு விருந்தினராக குழந்தைகள் நல மருத்துவர் ரத்தின தனவேந்தன் மற்றும் புதுவை செய்தி மற்றும் விளம்பரத்துறை உதவியாளர் உமா அமலோற்பவமரி ஆகியோர் கலந்து கொண்டு யு.கே.ஜி. வகுப்பு முடித்த மழலையர்களுக்கு பட்டமளித்து கவுரவித்தனர்.

புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் வாழ்த்துரை வழங்கினார். டாக்டர் ரத்தினவேல், காமராஜன் பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், கால்நடை டாக்டர் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக மழலையர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் மல்லர் கம்பம் நடைபெற்றது. இது பார்வையாளர்களை கவறும் வண்ணம் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.

மேலும் விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளி ஆசிரியைகள் லட்சுமி பிரியா , மகாலட்சுமி , சோனியா , சித்ரா, பெல்ஜிஸ் பேகம் ஆகியோர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News