கோப்பு படம்.
மதுபான ஆலைகளால் புதுவை பாலைவனமாகும்-முன்னாள் எம்.பி. ராமதாஸ் கண்டனம்
- மதுபான தொழிற்சாலைகளால் வேலைவாய்ப்பு உருவாகும், அவை குறைந்த தண்ணீரைத் தான் பயன்படுத்தி, வெளி மாநிலங்களில்தான் விற்பனை செய்யும் என தெரிவித்துள்ளார்.
- எதிர்காலத்தில் 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் புதுவைக்கு வருவார்கள் என சுற்றுலாத்துறை அமைச்சர் கூறுகிறார். புதுவையை ஏற்கனவே மதுச்சேரியாக மாற்றி விட்டனர்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
மண்ணாடிப்பட்டில் நடந்த அரசு விழாவில் பேசிய முதல்-அமைச்சர், மதுபான தொழிற்சாலைகளால் வேலைவாய்ப்பு உருவாகும், அவை குறைந்த தண்ணீரைத் தான் பயன்படுத்தி, வெளி மாநிலங்களில்தான் விற்பனை செய்யும் என தெரிவித்துள்ளார்.
மதுபான தொழிற்சாலை கள் மூலமாகத்தான் வேலை வாய்ப்பு வர வேண்டுமா? தொழில்நுட்ப பூங்கா தொடங்குவது,
5 பஞ்சாலைகளை திறப்ப தால் அதிக வேலை வாய்ப்பை உருவாக்க முடியாதா? மதுபான ஆலைகளால் புதுவையின் கிராமங்கள் பாலைவனமாகி சுற்றுச் சூழல் பெரிதும் பாதிக்கப்படும்.
எதிர்காலத்தில் 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் புதுவைக்கு வருவார்கள் என சுற்றுலாத்துறை அமைச்சர் கூறுகிறார். புதுவையை ஏற்கனவே மதுச்சேரியாக மாற்றி விட்டனர்.
கவர்னர் கூறிய ஆண், பெண் சமத்துவத்தை போற்றும் வகையில் பெண்களுக்காக மது பார்கள் திறக்கப்பட்டுள்ளது. தேவை அதிதமாகிவிட்ட பிறகு புதுவையில் உற்பத்தியாகும் மதுபானத்தை வெளியில் அனுப்ப வேண்டிய அவசியம் இருக்காது. அவற்றை உள்ளூரிலே விற்கலாம். மதுபான தொழிற்சாலை கள் ஆரம்பிக்க முதல்-அமைச்சர் கூறும் எந்த காரணத்தையும்ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இவற்றுக்கு அப்பாற்பட்ட வேறு விஷயங்கள்தான் மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி கொடுக்க காரண மாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.