புதுச்சேரி

புதிய ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்த காட்சி.

அரியூர் சுகாதார மையத்தில் புதிய ஆம்புலன்ஸ் சேவை

Published On 2023-06-03 14:20 IST   |   Update On 2023-06-03 14:20:00 IST
  • அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்
  • ஆச்சாரியார் கல்விக் குழும தலைவர் அரவிந்தன் உள்ளிட்ட நலவாய்துறை, மருத்துவ அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

புதுவையை அடுத்த மங்கலம் தொகுதி அரியூர் பகுதியில் உள்ள அரசு சுகாதாரம் மற்றும் நல வாழ்வு மையம் இயங்கி வருகிறது.

இங்கு பல ஆண்டு காலமாக ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர்.

இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள் அமைச்சர் தேனீ ஜெயக்குமாரிடம் கோரிக்கை வைத்தனர்.

அதன் பேரில் தனியார் நிறுவன பங்காளிப்புடன் புதிய ஆம்புலன்ஸ் வசதி மற்றும் வாரந்தோறும்  இலவச பல் மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான தொடக்க விழா நடந்தது.

அமைச்சருர் தேனீ. ஜெயக்குமார் இலவச ஆம்புலன்ஸ் சேவை மற்றும் இலவச பல் சிகிச்சை பிரிவு ஆகியவற்றை தொடக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, ஆச்சாரியார் கல்விக் குழும தலைவர் அரவிந்தன் உள்ளிட்ட நலவாய்துறை, மருத்துவ அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News