நீட் தேர்வில் சாதனை படைத்த ஆல்பா பள்ளி மாணவர்களை பள்ளி இயக்குனர் தனதியாகு சால்வை அணிவித்து பாராட்டிய காட்சி.
ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் சாதனை
- மாணவர்களும் அதிக மதிப்பெண்கள் பெற்று 5 இடத்தை பிடித்துள்ளனர்.
- மாணவர்களின் விடா முயற்சியாலும், கற்க வேண்டும் என்ற ஆர்வத்தாலும் இப்பயிற்சி வகுப்பானது மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி:
உருளையன்பேட்டை, மங்கலக்ஷ்மி நகர் ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், இந்த வருடம் (2022-2023) மொத்தம் 90 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். அதில் 86 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
மேலும் நீட் தேர்வு எழுதிய கவுஷிக்கா - 640, தீபக்-587, அப்துல் அபீப் - 518, நிரஞ்சனா - 500, இளங்கோவன் - 487 ஆகிய 5 மாணவர்களும் அதிக மதிப்பெண்கள் பெற்று 5 இடத்தை பிடித்துள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்களுக்கு ஆல்பா கல்வி நிறுவனங்களின் இயக்குனர் தனதியாகு பொன்னாடை போர்த்தியும், மலர்க்கொத்து கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் பாராட்டினார்.
இதுகுறித்து ஆல்பா கல்வி நிறுவனங்களின் இயக்குனர் தனதியாகு கூறியதாவது:-
ஆல்பா பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும், பாடப் பிரிவின் அடிப்படையில் நீட் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
நீட் சிறப்பு வகுப்பிற்கான அந்தந்த துறை நிபுணர்கள் சென்னை மற்றும் ஹைதராபாத்திலிருந்து வரவழைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆசிரி யர்களின் கடின உழைப்பா லும் ஊக்கத்தினாலும், மாணவர்களின் விடா முயற்சியாலும், கற்க வேண்டும் என்ற ஆர்வத்தாலும் இப்பயிற்சி வகுப்பானது மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.