புதுச்சேரி

என்.சி.சி. மாணவர்கள் பாய்மர படகு சாகச பயணத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

என்.சி.சி. மாணவர்கள் பாய்மர படகு சாகச பயணம்

Published On 2023-06-02 09:31 GMT   |   Update On 2023-06-02 09:31 GMT
  • முதல்-அமைச்சர் ரங்கசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
  • மாணவிகள் உள்பட 60 தேசிய மாணவர் படை மாணவர்கள் புறப்பட்டனர்.

புதுச்சேரி:

தேசிய மாணவர் படையினரின்கடலூர் தேசிய மாணவர் கப்பல் படை பிரிவு மற்றும் தேசிய மாணவர் கப்பல் படை பிரிவு மாணவர்கள் இணைந்து கடல் பாய்மரப்படகு சாகச பயணத்தை மேற்கொண்டனர்.

ரங்கசாமி தொடங்கி வைத்தார்

புதுவை துறைமுகத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பாய்மர படகு கடல் சாகச பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பாஸ்கர் எம்.எல்.ஏ. தேசிய மாணவர் கப்பல் படை பிரிவு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் முதல்- அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

மாணவர் பருவத்திலேயே மாணவர்கள் அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். நாட்டின் பாதுகாப்பில் மாணவர்களும் அக்கறை எடுத்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தேசிய மாணவர் படை செயல்பட்டு வருகிறது.

இளம் வயதில் நாட்டு பற்றை மாணவர்களுக்கு உருவாக்க வேண்டும். 11 நாட்கள் கடலில் சாகச பயணம் மேற்கொள்வது என்பது எளிதான ஒன்று அல்ல. இந்த பயணத்திற்கு துணிவு வேண்டும். இதன் மூலம் சிறந்த அனுபவம் கிடைக்கும்.

இளம் வயதில் பிள்ளைகளை நல்வழிப்படுத்த இதுபோன்ற சாகச பயணங்கள் துணை புரியும். மாணவர்களுக்கு கல்வியோடு சிறந்த ஒழுக்கத்தை வழங்க வேண்டும்.

இளம் வயதில் கற்பது தான் மாணவர்களுக்கு மனதில் பதியும். புதுவையில் மாணவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் 25 மாணவிகள் உள்பட 60 தேசிய மாணவர் படை மாணவர்கள் புறப்பட்டனர்.

302 கிலோமீட்டர் தூரத்தை கடக்கவுள்ள இந்த பாய்மர படகு சாகசப் பயணம் புதுவையில் தொடங்கி கடலூர், பரங்கிப்பேட்டை, பூம்புகார் வழியாக காரைக்கால் சென்றடைந்து மீண்டும் அதே வழியில் திரும்பும்.

இந்த குழுவினர் தாங்கள் செல்லும் இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் ரத்த தான முகாம், மரம் நடுதல், கடற்கரை தூய்மைப் பணித் திட்டம் எனப் பல சமூக சேவை சார்ந்த நிகழ்வுகளை நடத்த உள்ளனர்.

தேசிய மாணவர் படை மாணவர்களின் உள்ளத் திறன் மேம்படுவதோடு கடல் பயணம் குறித்த அச்சம் நீங்கி ஆயுதப்படையில் மாணவர்களை சேரும் எண்ணத்தை தூண்டும் பயிற்சியாக கடல் பயிற்சி அமையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News