புதுச்சேரி

பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்ற காட்சி.

நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்

Published On 2023-03-18 12:18 IST   |   Update On 2023-03-18 12:18:00 IST
  • பனை மரத்தின் தேவை- அவசியம் குறித்து தனசுந்தராம்பாள் சொசைட்டி தலைவர் பூரணாங்குப்பம் ஆனந்தன் விளக்கினார்.
  • மாணவி ஒருவருக்கு பனை ஓலைகளால் ஆன ஆபரண நகைகளை அணிவித்து விளக்கப்பட்டது.

புதுச்சேரி:

புதுவை பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் 7 - நாட்கள் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு பயிற்சி முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ராஜூ சுகுமார் தலைமையில், புதுவை ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அருளரசி,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பனை மரத்தின் தேவை- அவசியம் குறித்து தனசுந்தராம்பாள் சாரிடெபுள் சொசைட்டி தலைவர் பூரணாங்குப்பம் ஆனந்தன் விளக்கினார். பிரமிட் விஞ்ஞானி டாக்டர் வரதராஜன் மாணவிகள் நினைவாற்றல், பிரமிட் தியானம் மூலம் அதிகரித்தல் மற்றும் மன அழுத்தம் போக்குதல் பற்றி விரிவாக பேசினார்.

நிகழ்ச்சியில் மாணவி ஒருவருக்கு பனை ஓலைகளால் ஆன ஆபரண நகைகளை அணிவித்து விளக்கப்பட்டது. முடிவில் கல்லூரி பேராசிரியர் ஆரோக்கியமேரி நன்றி கூறினார்.நிகழ்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் 100 மாணவிகள் பங்குபெற்று பயன் பெற்றனர்.

இதற்கான ஏற்பாடு களை தன்னார்வளர்கள், வண்டிமுத்து, சந்திரசூட், டோன்ட் வேஸ்ட் புட் ஸ்டீபன் ராயப்பா. மனித உரிமை இயக்கம் சிவசந்திரன், சிறு சேமிப்பு ஆலோசகர் பிரசாத், மற்றும் கல்லூரி மாணவிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News