புதுச்சேரி

திரு.வி.க.-வீரமாமுனிவர் அரசு பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி நடந்த போது எடுத்த படம்.

திரு.வி.க.-வீரமாமுனிவர் அரசு பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி

Published On 2023-12-01 09:22 GMT   |   Update On 2023-12-01 09:22 GMT
  • மாணவர்கள் உருவாக்கிய 167 அறிவியல் படைப்புகள் இக்கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது.
  • அனைத்து ஆசிரியர்கள்-ஆசிரியைகள் மற்றும் பள்ளி ஊழியர்கள் பள்ளி மேலாண்மை குழுவினர் செய்திருந்தனர்.

 புதுச்சேரி:

புதுவை தமிழ் தென்றல் திரு.வி.க.அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் வீரமாமுனிவர் அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி ஆகியவை இணைந்து அறிவியல் கண்காட்சியை நடத்தியது.

தொடக்க விழா நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மரூபஸ், தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பிரெஞ்சு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மனோஜ் கலந்துகொண்டு அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்தார். மாணவர்கள் உருவாக்கிய 167 அறிவியல் படைப்புகள் இக்கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது.

கொம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர் ஞானமணி, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு காட்சி படைப்புகளை மதிப்பீடு செய்து சிறந்த படைப்புகளை தேர்வு செய்தார்.

பள்ளி அளவில் நடைபெற்ற இக்கண்காட்சிக் கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் அனைத்து ஆசிரியர்கள்-ஆசிரியைகள் மற்றும் பள்ளி ஊழியர்கள் பள்ளி மேலாண்மை குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News