புதுச்சேரி

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்ட காட்சி.

பீனிக்ஸ் ஸ்கிரீணிங் சேவை மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Published On 2023-06-13 06:17 GMT   |   Update On 2023-06-13 06:17 GMT
  • பீனிக்ஸ் ஸ்கிரீணிங் சேவை மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • பல்வேறு திறன் மேம்பாட்டிற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம்.

புதுச்சேரி:

விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையானது தங்கள் துறையில் பயிலும் தடய அறிவியல் பிரிவு மாணவர்களின் கல்வி சார்ந்த தொழில் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்காக பெங்களூரில் உள்ள பீனிக்ஸ் ஸ்கிரீணிங் சேவை மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் துறையின் டீன் பேராசிரியர் செந்தில்குமார் மற்றும் பீனிக்ஸ் ஸ்கிரீணிங் மையத்தின் நிர்வாக இயக்குனர் விஜய்ரெட்டி ஆகியோர் கையெழுத்திட்டனர். இதற்கான ஏற்பாட்டினை துறையின் தடய அறிவியல் பிரிவின் பொறுப்பாளர் மோகன் மற்றும் உதவி பேராசிரியர்கள் லின்சி அனாமிகா, சாண்ட்ரா ஆகியோர் செய்திருந்தனர்.

இதுகுறித்து துறையின் பேராசிரியர் டாக்டர் செந்தில் குமார் கூறியதாவது:-

பீனிக்ஸ் ஸ்கிரீணிங் மையமானது பெங்களூரில் செயல்பட்டு வரும் தடயவியல் சார்ந்த சேவைகளை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி வரும் நிறுவனமாகும். இதனுடன் எங்கள் துறையின் தடய அறிவியல் பிரிவு மாணவர்களின் பல்வேறு திறன் மேம்பாட்டிற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம்.

குறிப்பாக மாணவர்க ளின் தொழில்துறை சார்ந்த பயிற்சிகள், துறை சார்ந்த திறன் மேம்பாடு, ஆராய்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் கருத்தரங்குகள் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்வதற்காக கையெழுத்திடப்பட்டுள்ளது. இது மாணவர்களின் துறை சார்ந்த எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்றார்.

Tags:    

Similar News