புதுச்சேரி

கொசு மருந்து அடிக்கும் பணியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

உப்பளம் தொகுதி முழுவதும் கொசு மருந்து அடிக்கும் பணி

Published On 2023-09-21 13:48 IST   |   Update On 2023-09-21 13:48:00 IST
  • அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
  • புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தில் ஆணையரை சந்தித்து கென்னடி எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார்.

புதுச்சேரி:

புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தில் ஆணையரை சந்தித்து கென்னடி எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை ஏற்று கொசு மருந்து அடிக்கும் பணி உப்பளம் தொகுதியில் தொடங்கப்பட்டது.

இதனை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். மேலும் இப்பணியின் பொழுது அதிகாரிகள் வீடு, வீடாக சென்று டெங்கு கொசு தடுப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

Tags:    

Similar News