புதுச்சேரி

தேரோட்டத்தை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வடம் பிடித்து தொடங்கி வைத்த காட்சி.

null

கெங்கைவராக நதீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டம்- அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்

Published On 2023-03-05 06:40 GMT   |   Update On 2023-03-05 07:11 GMT
  • வில்லியனூர் திருக்காஞ்சியில் உள்ள கெங்கைவராக நதீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • உற்சவர் கெங்கைவராக நதீஸ்வரருக்கு காலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமி தேரில் எழுந்தருளினார்.

புதுச்சேரி:

வில்லியனூர் திருக்காஞ்சியில் உள்ள கெங்கைவராக நதீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முக்கிய நிகழ்வாக 8-ம் நாளான சுவாமிக்கு திருக்கல்யாணம், ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. 9-ம் நாளான தேரோட்டம் நடைபெற்றது.

உற்சவர் கெங்கைவராக நதீஸ்வரருக்கு காலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமி தேரில் எழுந்தருளினார். தேரை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வடம் இழுந்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் சிவசங்கரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.ஊர் மக்கள் ஒன்றுகூடி தேரைவடம் பிடித்து இழுந்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மதியம் 12 மணியளவில் மீண்டும் கோவிலை அடைந்தது.

சங்கராபரணி ஆற்றங்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைப்பெற உள்ளது.

இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள கோவில்களில் இருந்து உற்சவமூர்த்திகள் பங்கேற்கின்றன.

Tags:    

Similar News