புதுச்சேரி

கூடப்பாக்கம் பறை இசைக் கலைஞர் ஜெகதலபிரதாபனை அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார் பாராட்டிய காட்சி.

இசை கலைஞருக்கு அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார் பாராட்டு

Published On 2023-04-02 10:16 IST   |   Update On 2023-04-02 10:16:00 IST
  • பா.ஜனதா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது கலை குழுவினர் மூலம் தொடர்ந்து பறையிசை நிகழ்ச்சி நடத்தி வருகின்றார்.
  • புதுவை காந்தி திடலில் 10 நாட்கள் நடந்த சாராஸ் கைவினை பொருள் கண்காட்சி நடைபெற்றது.

புதுச்சேரி:

ஊசுடு தொகுதி கூடப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜெகதலபிரதான். பறை இசை கலைஞர். இவர் தொகுதி மற்றும் பிற பகுதிகளில் நடக்கும் பா.ஜனதா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது கலை குழுவினர் மூலம் தொடர்ந்து பறையிசை நிகழ்ச்சி நடத்தி வருகின்றார்.

புதுவை காந்தி திடலில் 10 நாட்கள் நடந்த சாராஸ் கைவினை பொருள் கண்காட்சி நிகழ்ச்சியில் ஜெகதலபிரதாபன் தலைமையில் பறை இசை கலைஞர்கள் கலை நிகழ்ச்சி நடத்தி பாராட்டைப் பெற்றனர்.

இதையடுத்து பறை இசை கலைஞர் ஜெகதலபிரதாபனுக்கு பாராட்டு விழா நடந்தது.

இதில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் கலந்து கொண்டு ஜெகதலபிரதாபனுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் ஊசிடு தொகுதி பா.ஜனதா தலைவர் சாய்.தியாகராஜன் மற்றும் கூடப்பாக்கம் பிள்ளையார்குப்பம், ராமநாதபுரம், கரசூர்,தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பா.ஜனதா நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

பறை இசைக் கலைஞர் ஜெகதலபிரதாபன் ஆதிதிராவிடர் நலத்துறையின் ஊசுடு தொகுதி பா.ஜனதா மக்கள் நலன் தொடர்பாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News