புதுச்சேரி

முதல்-ரங்கசாமியை பிரெஞ்சு தூதர் சாண்டேல் சாமுவேல் டேவிட் சந்தித்த போது எடுத்த படம்.

பிரெஞ்சு தூதர் ரங்கசாமியுடன் சந்திப்பு

Published On 2022-09-07 09:02 GMT   |   Update On 2022-09-07 09:02 GMT
  • புதுவையில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் சொத்துக்கள் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் எழுந்தது.
  • புதுவைக்கான பிரெஞ்சு தூதர் சாண்டேல் சாமுவேல்டேவிட் சட்டசபைக்கு வந்து முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசினார்.

புதுச்சேரி:

புதுவையில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் சொத்துக்கள் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்டு வருவதா–கவும், அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் எழுந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் புதுவையில் உள்ள தூதரகத்தில் புகார் அளித்தனர். சமீபத்தில் முத்தியால்பேட்டையை சேர்ந்த பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர் தூதரகத்தில் புகார் அளித்ததுடன், பிரான்ஸ் அரசுக்கும் புகாரை அனுப்பினார்.

இதையடுத்து புதுவைக்கான பிரெஞ்சு தூதர் சாண்டேல் சாமுவேல்டேவிட் சட்டசபைக்கு வந்து முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசினார். அப்போது, சமீபகாலமாக பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களுக்கு புதுவை–யில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. அவர்களின் சொத்துக்களை அபகரிக்கும் நிலை உள்ளது.

இதுகுறித்து புதுவை அரசு நடவடிக்கை எடுத்து பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் சொத்துக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவர்கள் பாதுகாப்பான, அமைதியான வாழ்க்கை வாழ புதுவை அரசு உத்திரவாதம் அளிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் பிரெஞ்சு தூதர் வலியுறுத்தினார்.

இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி, பிரெஞ்சு குடியுரி–மை பெற்றவர்களுக்கும், அவர்களின் சொத்துக்க–ளுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதியளித்தார். இந்த சந்திப்பின்போது பிரெஞ்சு நாட்டின் கவுன்சிலர் பிரதீபன்–பேன்சிவா உடனிருந்தார்.

Tags:    

Similar News