புதுச்சேரி

கோப்பு படம்.

மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2023-08-05 09:05 GMT   |   Update On 2023-08-05 09:05 GMT
  • நாளை மறுநாள் நடக்கிறது
  • தேரோட்டத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் தொடங்கி வைக்கின்றனர்.

புதுச்சேரி:

வில்லியனூரை அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தில் உள்ள பிடாரி மீனாட்சியம்மன் கோவில் திருவிழா கடந்த 3-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்து வந்தது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை மறுநாள் (7-ந்தேதி) நடக்கிறது.

விழாவை முன்னிட்டு அதிகாலையில் ஒவ்வொருவர் வீட்டு வாசலிலும் ஆடுகளை பலியிடுவது வழக்கம். சாலையில் உள்ள ஆட்டு ரத்தத்தின் மீது தேர் செல்வது கோவிலின் சிறப்பு. இந்த தேரோட்டத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் தொடங்கி வைக்கின்றனர். வருகிற 8-ந்தேதி காலை மீண்டும் தேர் புறப்பாடு, பிற்பகல் 2 மணிக்கு ராமநாதபுரம் கிராமத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது.

அன்று இரவு மஞ்சள் நீராட்டுவிழா, காப்பு களைதல் நிகழ்ச்சி நடக்கிறது.

Tags:    

Similar News