புதுச்சேரி
மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூ. ஆர்ப்பாட்டம்
- புதுவை சாரம் ஜீவானந்தம் சிலை எதிரே மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- மதிவாணன் உட்பட பலர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
டெல்லியில் உள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடந்தது. இதனை கண்டித்து புதுவை சாரம் ஜீவானந்தம் சிலை எதிரே மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுவை மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கொளஞ்சியப்பன், தமிழ்ச்செல்வன், நகர கமிட்டி செயலாளர் மதிவாணன் உட்பட பலர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
முன்னதாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.