புதுச்சேரி

மணக்குள விநாயகர் கோவிலில் பவித்ரோற்சவ விழா நடந்த காட்சி.

மணக்குள விநாயகர் கோவிலில் பவித்ரோற்சவ விழா தொடங்கியது

Published On 2023-10-17 14:05 IST   |   Update On 2023-10-17 14:05:00 IST
  • புரட்டாசி மாதத்தில் பவித்ரோற்சவ விழா தொடங்கியது.
  • விதி உலா சென்ற பிறகு சில தோஷங்கள் ஏற்படும்

புதுச்சேரி:

மணக்குள விநாயகர் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் பவித்ரோற்சவ விழா தொடங்கியது. ஆண்டு தோறும் பிரம்மோற்சவம் முடிந்தவுடன் இந்த பவித்ரோற்சவம் நடப்பது வழக்கம் பிரம்மோற்சவத்தில் உற்சவர் 22 நாட்கள் வீதி உலா சென்று வந்த பிறகு புரட்டாசி மாதத்தில் பவித்ரா உற்சவம் நடக்கும்.

உற்சவ மூர்த்தி விதி உலா சென்ற பிறகு சில தோஷங்கள் ஏற்படும். அந்த தோஷங்களை நிவர்த்தி செய்வதற்கு இந்த பவித்ரோற்சவம் நடப்பது வழக்கம். நேற்று மாலை அணுக்கை பூஜையுடன் தொடங்கிய பிரம்மோற்சவ விழா வருகிற 19-ந் தேதி இரவு வரை கிடைக்கிறது

Tags:    

Similar News