புதுச்சேரி

கூட்டத்தில் விளையாட்டு வீரர்கள் நலச்சங்க தலைவர் வளவன் பேசிய போது எடுத்த படம்.

இந்திராகாந்தி விளையாட்டு அரங்கை பூட்டி மலர்வளையம் வைத்து போராட்டம்

Published On 2023-09-11 13:32 IST   |   Update On 2023-09-11 13:32:00 IST
  • விளையாட்டு வீரர்கள் நலச்சங்கம் முடிவு
  • விளையாட்டு வீரர்களின் கோரிக்கையை ஏற்று தனி விளையாட்டுத் துறையை புதுவை அரசு அவசர கதியில் அறிவித்துள்ளது.

புதுச்சேரி:

புதுவை மாநில விளையாட்டு வீரர் நல சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் கராத்தே வளவன் தலைமையில் நடைபெற்றது.

நிர்வாகிகள் கோவிந்தராஜ், சதீஷ், சந்தோஷ், ஆறுமுகம், செல்வம் , கதிர்காமம் அசோக், பாலச்சந்தர், செந்தில் கோடீஸ்வரன், சந்துரு, அருள் குமரன், பிரகதீஷ் உள்ளிட்ட நிர்வாகி கள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் விளையாட்டு வீரர்களின் கண்டன பேரணி வெற்றிகரமாக நடத்திட உதவி புரிந்த அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மேலும் விளையாட்டு வீரர்களின் கோரிக்கையை ஏற்று தனி விளையாட்டுத் துறையை புதுவை அரசு அவசர கதியில் அறிவித்துள்ளது.

எனவே அரசு விளையாட்டுத்துறையில் இணைத்துள்ள என்.சி.சி., என்.எஸ்.எஸ்., யூத் ஹாஸ்டல், நேரு யோகே ந்திரா, சமூக சேவை அமைப்புகள் ஆகியவற்றை நீக்கி விளையாட்டை மட்டும் முன்னிலைப்படுத்தி தனி விளையாட்டு துறை ஏற்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதேபோல் விளையாட்டு வீரர்களுக்கு சேர வேண்டிய பணத்தை நேரடியாக அரசாங்கம் அவர்களுக்கு காசோலை மூலம் வழங்க வேண்டும் என்று அரசை கேட்டுக்கொள்வது மேலும், உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கம், ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கம் ஆகியவற்றில் நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு உடனடியாக குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் மின்சார விளக்குகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

உடனடியாக ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் மின்சார வசதியை ஏற்படுத்தி ஏ.சி. பயன்பாட்டிற்கு பெற்றுத் தர வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்ற ப்பட்டது.

மேலும் விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் மீண்டும் புறக்கணித்தால் வருகிற 18-ந் தேதி  இந்திரா காந்தி விளையாட்டு அரங்கத்தை பூட்டி மலர் வளையம் வைத்து நுழைவாயிலில் கண்டன ஆர்ப்பாட்ட கூட்டம் நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Tags:    

Similar News