கோப்பு படம்.
பள்ளிகளுக்கு அருகே உள்ள மதுகடைகளை அகற்ற வேண்டும் -புதுவை பா.ம.க. தீர்மானம்
- ஆலோசனைக்கூட்டம் கவுண்டம்பாளையம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது
- மதுபான கடைகளை அகற்ற புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில பாமக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கவுண்டம்பாளையம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில அமைப்பாளர் கணபதி தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், தொகுதி தலைவர், செயலாளர்கள், பிற அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
செப்டம்பர் 17 வன்னியர் சங்கம் சார்பில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகள் நினைவை போற்றும் வகையில் கிராமம் தோறும் வன்னியர் சங்கம் சார்பில் பதாகைகள் வைத்து வீரவணக்கம் செலுத்துவது. பாராளுமன்றத் தேர்தல் முன்னிட்டு தொகுதி மற்றும் பூத் கமிட்டி கூட்டங்கள் நடத்துவது. புதுவை மாநிலத்தில் சுற்றுலா என்ற பெயரில் புற்றீசல் போல புதிய மதுபான கடைகள் திறக்க அரசு அனுமதி வழங்குவதை பாமக வன்மையாக கண்டிக்கிறது. பள்ளிகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகில் உள்ள மதுபான கடைகளை அகற்ற புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகர், கிராமங்களில் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும். தனியார் தொழி ல்சாலையில் மண்ணின் மைந்தர்க ளுக்கு வேலை வழ ங்கக்கோரி போராட்ட ங்கள் நடத்துவது. செல்லி ப்பட்டு அணையை கட்ட வலியுறுத்தி பாட்டாளி உழவர் பேரியக்கம் சார்பில் புதிய அணை கட்டும் போராட்டம் நடத்துவது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாநில துணை அமைப்பாளர் வடிவேல், வன்னியர் சங்க துணை தலைவர் தலைவர் பாண்டுரங்கன் , வன்னியர் சங்க பொருளாளர் நரசிம்மன், வன்னியர் சங்க செயலாளர் நாகப்பன், முருகன், சமூக முன்னேற்ற சங்க மாநில துணை தலைவர் சிவப்பிரகாசம் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.