கோப்பு படம்.
புதுவையில் சட்ட ஒழுங்கு சீர்குலைவு-எதிர்கட்சித்தலைவர் சிவா புகார்
- புதுவையில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மக்கள் அச்சத்தில் வாழும் சூழல் உள்ளது.
- அதுவரை அந்த ஆய்வாளரை தற்காலிக பணிநீக்கம் செய்து, வேறு ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் பூஜ்யநேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் சிவா பேசியதாவது:-
புதுவை மாநிலத்தின் உள்துறை அமைச்சரின் தீவிர ஆதரவாளர், மங்கலம் தொகுதி பா.ஜனதா செயலாளர் பொறுப்பில் இருந்தவர் வில்லியனூர் கணுவாப்பேட்டையை சேர்ந்த செந்தில்குமார் நேற்றிரவு நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை உள்ளது. புதுவையில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மக்கள் அச்சத்தில் வாழும் சூழல் உள்ளது. கொலையாளிகள் சவுகரியமாக வந்து கொலை செய்துவிட்டு செல்லும் நிலை புதுவையில் தொடர்கிறது.
கொலையாளிகளுக்கு தகுந்த தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும். இந்த கொலையின் பின்னணி குறித்து ஆராய வேண்டும். அதுவரை அந்த ஆய்வாளரை தற்காலிக பணிநீக்கம் செய்து, வேறு ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.