புதுச்சேரி

கியாஸ் சிலிண்டர் விலை குறைப்பை வரவேற்று பா.ஜனதா மகளிர் அணியினர் கோலமிட்டு கொண்டாடிய காட்சி. 

பா.ஜனதாவினர் கோலமிட்டு கொண்டாட்டம்

Published On 2023-08-31 11:09 IST   |   Update On 2023-08-31 11:09:00 IST
  • கியாஸ் சிண்டர் விலையை பிரதமர் மோடி ரூ.200 குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
  • தொகுதி செயலாளர் ஆனந்திராமு, சுஜதா, சுகந்தினி மற்றும் ஏரளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் கியாஸ் சிண்டர் விலையை பிரதமர் மோடி ரூ.200 குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதனை நாடுமுழுவதும் உள்ள பொதுமக்கள் வரவேற்று பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக புதுவை உழவர்கரை மாவட்டம் தட்டாஞ்சாவடி தொகுதியில் தொகுதி தலைவர் பசுபதி தலைமையில் உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன் முன்னிலையில் வீதியெங்கும் பெண்கள் ரங்கோலி கோலமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பா.ஜனதா மாநிலத் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சாமிநாதன் கலந்துகொண்டு பெண்களுக்கு பாராட்டையும் மகிழ்ச்சியும் தெரிவித்தார்

இந்நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில துணைதலைவர் முருகன், தேசிய மகளிர் அணி செயற்குழு உறுப்பினர் தாமரை செல்வி, மாவட்ட மகளிர் அணி தலைவி வள்ளி, உழவர்கரை மாவட்ட முழுநேர ஊழியர் ரமணாஷங்கர், தொகுதி செயலாளர் ஆனந்திராமு, சுஜதா, சுகந்தினி மற்றும் ஏரளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News