புதுச்சேரி
கோப்பு படம்.
- மெயின் ரோட்டில் ஒரு வாலிபர் கையில் கத்தியுடன் பொதுமக்களை மிரட்டிக்கொண்டிருந்ததை கண்டனர்.
- போலீசார் அவனிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை பெரியக்கடை சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கோவிந்தசாலை பாரதிபுரம் மெயின் ரோட்டில் ஒரு வாலிபர் கையில் கத்தியுடன் பொதுமக்களை மிரட்டிக்கொண்டிருந்ததை கண்டனர். அவரை பிடித்து விசாரித்தபோது அவர் கோவிந்தசாலை அந்தோனியார் கோவில் வீதியை சேர்ந்த பரத் (வயது 34) என்பது தெரியவந்தது.
மேலும் ரவுடியான பரத் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து பரத்தை கைது செய்த போலீசார் அவனிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்தனர்.