புதுச்சேரி

 தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.

null

கருணாநிதி நினைவு தின நிகழ்ச்சி

Published On 2023-08-07 14:04 IST   |   Update On 2023-08-07 14:04:00 IST

புதுச்சேரி:

வில்லியனூர் தொகுதி விமணவெளி பகுதியில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 5-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது.

பொதுக்குழு உறுப்பினர் தர்மராஜ் தலைமை தாங்கினார். தொகுதி பிரதிநிதி சபாபதி முன்னிலை வகித்தார். அவைத்தலைவர் ரமேஷ் தி.மு.க. கொடியை ஏற்றினார்

பின்னர் கருணாநிதியின் திருவுருப்படத்துக்கு. கிளைச் செயலாளர்கள் பாலகுரு, அரிகரன், வாசுதேவன், நடராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ராஜேந்திரன், லட்சுமணன், முருகன், சவுந்திர மூர்த்தி, புருஷோத்தமன், டைலர் முருகன், கந்தசாமி, வேல்முருகன், சிவா, அருள்தாஸ், வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.

மூத்த நிர்வாகிகள் பழனிச்சாமி, தட்சிணாமூர்த்தி ஆகியோர் கருணாநிதியின் நினைவுகளை எடுத்தி கூறி நிறைவுரையாற்றினர்.  

Tags:    

Similar News