முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் கார்கில் போர் வெற்றி தின விழா நடந்த போது எடுத்த படம்.
கார்கில் போர் வெற்றி தின கொண்டாட்டம்
- நாட்டு நல பணி திட்டத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதற்கான உறுதிமொழி ஏற்றனர்.
- மாணவர்களும் கவுண்டன் பாளையம் பஞ்சா யத்தாரும் இணைந்து கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை கவுண்டன்பாளையம் முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் கார்கில் போரில் வீர மரணம் அடைந்த மாவீரர்களின் நினைவை போற்றும் வகையில் மற்றும் கார்கில் போர் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் மாணவர்களும் கவுண்டன் பாளையம் பஞ்சா யத்தாரும் இணைந்து கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
மேலும் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்று பிரதமர் மோடி தனது "பஞ்ச் பிரான்" தீர்மானங்களை வகுத்துள்ளார்.
இந்த கோரிக்கையை ஏற்று பள்ளி வளாகத்தில் நாட்டு நல பணி திட்டத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதற்கான உறுதிமொழி ஏற்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கு புதுவை மாநில கோஜிரியோ கராத்தே சங்கத்தின் பொதுச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார்.
பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், பள்ளி துணை முதல்வர் வினோலியா டேனியல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளையும் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெயந்தி செய்திருந்தார்.