கல்விதுறை அலுவலக வளாகத்தில் சமூக அமைப்பினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
கேட் ஏறி குதித்து கல்வித்துறை வளாகத்தில் முற்றுகை
- ஆசிரியர்களை அலுவல் பணிக்கு அனுப்ப எதிர்ப்பு
- அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவும்போது ஆசிரியர்களை வேறு பணிக்கு மாற்றுவது மாணவர்களின் கல்வியை பாதிக்கும்.
புதுச்சேரி:
புதுவை அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் சர்வீஸ் பிளேஸ்மென்ட் அடிப்படையில் கல்வித்துறையில் அலுவல் பணி செய்யவும், சட்டசபையில் அமைச்சர், எம்.எல்.ஏ.க் கள் அலுவலகத்தில் பணிபுரியவும் அனுப்பப்படுவார்கள்.
சமீபத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் 72 ஆசிரியர்களை கல்வித்துறையில் அலுவல் பணி செய்ய அழைக்கப்பட்டிருந்தனர். இதற்கு அரசியல் கட்சிகள் பல்வேறு சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவும்போது ஆசிரியர்களை வேறு பணிக்கு மாற்றுவது மாணவர்களின் கல்வியை பாதிக்கும். மற்ற ஆசிரியர்கள் பணி சுமையால் பாதிக்கப்படுவர் என குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் இதனை கண்டித்து கல்வித்துறை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது.
திராவிடர் விடுதலை கழக தலைவர் லோகு அய்யப்பன் தலைமை தாங்கினார்.
மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாரன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் வீரமோகன். மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஜெகநாதன், திராவிடர் கழகம் சிவ வீரமணி, இளங்கோ, தமிழர் களம் அழகர்,தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், ராஜா, பெரியார் சிந்தனையாளர் இயக்கம் தீனா, அம்பேத்கர் தொண்டர் படை பாவாடைராயன், சிந்தனையாளர் ேபரவை கோ. செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
போராட்ட த்தினால் கல்வித்துறை அலுவ லகத்தின் 2 நுழைவு வாயிலும் பூட்டப்பட்டி ருந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் திடீரென கேட்டின் மீது ஏறி உள்ளே குதித்தனர். வாயில் கதவை அவர்களே திறந்து விட்டனர்.
போராட்ட த்தில் ஈடுபட்ட அனைவரும் கல்வித்துறை வளாகத்தி ற்குள் நுழைந்து படிக்கட்டு களில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமாதா னப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு, பதட்டமும் ஏற்பட்டது.