புதுச்சேரி

கோப்பு படம்.

பிரெஞ்சு பேசும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம்

Published On 2023-11-17 09:55 IST   |   Update On 2023-11-17 09:55:00 IST
  • கொட்டுப்பாளையம் நவீன மீன் அங்காடி சுகாதார வளாகத்தில் பிரெஞ்சு வேலை வாய்ப்பு முகாமை நடத்துகிறது.
  • 12-ம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ, இளங்கலை பட்டம் பெற்ற நன்கு பிரெஞ்சு பேசத் தெரிந்த இளைஞர்கள் அனைவரும் பங்கேற்கலாம்.

புதுச்சேரி:

உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உழவர்கரை நகராட்சி நகர வாழ்வாதார மையம், நவயுகா கன்சல்டன்சி இணைந்து நாளை (சனிக்கிழமை) கொட்டுப்பாளையம் நவீன மீன் அங்காடி சுகாதார வளாகத்தில் பிரெஞ்சு வேலை வாய்ப்பு முகாமை நடத்துகிறது.

காலை 9 முதல் மதியம் 2 மணி வரை சென்னை சதர்லேண்ட் குளோபல் சர்வீஸ் நிறுவனத்தின் பிரெஞ்சு வாடிக்கையாளர் சேவை பணிக்கு ஆட்கள் தேர்வு நடக்கிறது.

முகாமில் 12-ம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ, இளங்கலை பட்டம் பெற்ற நன்கு பிரெஞ்சு பேசத் தெரிந்த இளைஞர்கள் அனைவரும் பங்கேற்கலாம். மாத சம்பளமாக ரூ.35 ஆயிரம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News