புதுச்சேரி

கோப்பு படம்.

அறிவியல் செய்முறை பயிற்சிக்கு தனிதேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

Published On 2023-08-10 11:22 IST   |   Update On 2023-08-10 11:22:00 IST
  • பயிற்சி வகுப்பில் சேர பெயர்களை பதிவு செய்ய 21-ந் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.
  • மையத்தில் அறிவிக்கப்படும் நாட்களில் சென்று செய்முறை பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் சிவசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2023-24-ம் கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு பொது தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள நேரடி தனி தேர்வர்கள், ஏற்கனவே அறிவியல் பாடத்தில் தோல்வியடைந்தவர்கள், அறிவியல் பாட செயற்முறை பயிற்சி வகுப்பில் சேர பெயர்களை பதிவு செய்ய 21-ந் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

இதற்காக சேவை மையங்கள் அமைக்கப் பட்டுள்ளது. ஆண் தனி தேர்வர்கள் வில்லியனூர் ஐ.டி.எல் பள்ளியிலும், பெண்கள் புதுவை இமாகுலேட் பள்ளியிலும் பதிவு செய்யலாம். மையத்தில் அறிவிக்கப்படும் நாட்களில் சென்று செய்முறை பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க வேண்டும். 80 சதவீத வருகை உள்ள தனி தேர்வர்கள் மட்டுமே பொது தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அவர் குறிப் பிட்டுள்ளார்.

Tags:    

Similar News