புதுச்சேரி

கோப்பு படம்.

இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் நடத்த கூடாது

Published On 2023-06-29 11:38 IST   |   Update On 2023-06-29 11:38:00 IST
  • மக்கள் பாதுகாப்பு பேரியக்கம் வலியுறுத்தல்
  • பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.

புதுச்சேரி:

புதுவை மக்கள் பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை அரசு தொடர்ந்து விளையாட்டு வளர்ச்சியை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. புதுவை மாநில விளையாட்டு வீரர்களின் நீண்ட நாள் கோரிக்கை தனியாக விளையாட்டுத்துறை ஏற்படுத்த வேண்டும் என்பதாகும்.

ஆனால் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கி வருவது கண்டிக்கத்தக்கது.

வருகிற 7-ந் தேதி புதுவை மாநில வங்கிகளின் சார்பில் நடைபெறும் விழாவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.

விளையாட்டிற்கு சம்பந்த மில்லாத அத்தகைய ஒரு விழாவை உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் நடத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

இந்த விளையாட்டு அரங்கம் தொடங்கி 33 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் சிந்தடிக் பதித்து விளையாட்டு பயிற்சி பெற தயார் நிலையில் உள்ளது.

இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தினால் இந்த விளையாட்டு அரங்கம் முழுவதுமாக சேதம் அடைந்து விடும், ஏனென்றால் விழா மேடைகள் அமைப்பதற்கு அனைத்து வகையான கனரக வாகனங்கள் உள்ளே சென்று ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள தயாராக உள்ளன.

பிரதமர் மோடியின் பல நிகழ்ச்சிகளை லாஸ்பேட்டை விமான தள மைதானத்தில் நடத்தியுள்ளார்.

அதேபோல் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்கும் வங்கி சம்பந்தப்பட்ட விழாவினை யும் லாஸ்பேட்டை மைதானத்திலே அல்லது உப்பளம் துறை முக பகுதிகளில் நடத்த கவர்னரும், தலைமைச் செயலாளரும் பரிந்துரை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News