ஆலோசனைக் கூட்டத்தில் வட்டார காங்கிரஸ் தலைவர் ராமு பேசிய காட்சி.
இந்தியா கூட்டணி வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்
- ஊசுடு வட்டார காங். தலைவர் ராமு வலியுறுத்தல்
- 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்.
புதுச்சேரி:
ஊசுடு தொகுதி வடக்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் சேதராப்பட்டில் நடந்தது.
ஆலோசனைக் கூட்டத்தில் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ராமு தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஊசுடு செந்தில்குமார், வட்டார துணைத்தலைவர் பிரபாகர், முன்னாள் பஞ்சாயத்து துணைத்தலைவர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. அறிவுறுத்தலின்படி நடந்த கூட்டத்தில் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ராமு பேசியதாவது:-
ஊசுடு தொகுதியில் ஊசுடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியினைமேலும் வலுப்படுத்த வேண்டும். பூத் கமிட்டி அமைத்து தேர்தல் பணியை தொடங்க வேண்டும்.
9 ஆண்டுகால மோடி அரசின் மக்கள் விரோத போக்கை பொது மக்களிடையே பிரச்சாரம் செய்ய வேண்டும். மணிப்பூர் கலவரத்தில் பெண்கள் படும் இன்னல்க ளுக்கு பா.ஜனதா அரசு தான் காரணம். 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் ஊசுடு தொகுதி பொறுப்பா ளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கார்த்திகேயன் சிறப்பு அழைப்பா ளராக கலந்து கொண்டார்.
இதில் காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் தங்க. கணேசன், சேகர், தேவராசு ,சுந்தரமூர்த்தி, ஆறுமுகம் ,பி.சி.சி. உறுப்பினர் பாபு என்ற பழனி ராஜா, வட்டார காங்கிரஸ் குணா, மாவட்டத் துணைத் தலைவர் குமார், மாவட்ட பொதுச் செயலாளர் பாலமுருகன், சம்பத், இருசப்பன், அல்போன்ஸ் ,பாபு, தண்டபாணி, தனசேகரன், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் வீரபாலு, இளைஞர் காங்கிரஸ் துணை தலை வர்உதயகுமார் மற்றும் காங்கி ரஸ் கட்சி பிரமுகர்கள் உ ள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.