புதுச்சேரி

கோப்பு படம்.

முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு ஊக்குவிப்பு தொகை

Published On 2023-06-15 08:07 GMT   |   Update On 2023-06-15 08:07 GMT
  • பூர்த்தி செய்த விண்ணப் பங்களை வரும் ஆகஸ்ட் 4-ந் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.
  • தேசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு வெகுமதி வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

புதுச்சேரி:

புதுவை முப்படை நலத்துறை இயக்குனர் சந்திரகுமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2022-23-ம் கல்வியாண்டில் 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 3 மாணவ, மாணவி களுக்கு ஊக்குவிப்பு தொகை வழங்குதல், இளநிலை, முதுநிலை கல்லூரி படிப்பில் பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம் பெற்றவர்கள், சர்வதேச, தேசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு வெகுமதி வழங்க விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகிறது.

இந்த உதவிகளை பெற புதுவை யூனியன் பிரதேசத்தை சேர்ந்த தகுதி யுள்ள முன்னாள் ராணுவ வீரர்கள், விதவை கள் விண்ணப்பத்தை முப்படை நலத்துறையில் வரும் 19-ந் தேதி முதல் ஜூலை 28-ந் தேதி வரை அடையாள அட்டையின் அலுவல கத்துக்கு வந்து நேரில் பெறலாம்.

இணைய தளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப் பங்களை வரும் ஆகஸ்ட் 4-ந் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். காரைக்கால், மாகே, ஏனாமில் பிராந்தியங்களில் கலெக்டர் அலுவலகம், மண்டல நிர்வாக அலுவலத்தில் விண்ணப்பத்தை பெற்று விண்ணப்பிக்கலாம். காலம் கடந்து வரும் விண்ணப்பங்கள், பரிசீலனைக்கு ஏற்கப்படாது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News