புதுச்சேரி

முதலாம் ஆண்டு வகுப்புகளை டீன் டாக்டர் செந்தில்குமார் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அருகில் இயக்குனர் ஆட்ன்ரூ ஜான், நிர்வாக அதிகாரி சந்துரு உள்ளனர்.

விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா

Published On 2023-08-31 14:59 IST   |   Update On 2023-08-31 14:59:00 IST
  • மகளிர் கல்லூரி பேராசிரியை பர்வீன் சுல்தானா கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளித்து பேசினார்.
  • மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்துகொண்டனர். முடிவில் கல்வி ஒருங்கிணைப்பாளர் வளர்மதி நன்றி கூறினார்.

புதுச்சேரி:

கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் அலை டு ஹெல்த் சயின்ஸ் துறையில் நடப்பு கல்வி ஆண்டின் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.

விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் டாக்டர் ஏ.எஸ்.கணேசன், இயக்குனர் டாக்டர் அனுராதா கணே சன் ஆகியோர் வழிக்காட்டு தலின்படி நடைபெற்ற இந்த விழாவுக்கு துறையின் டீன் டாக்டர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். புதுச்சேரி பிரிவு இயக்குனர் ஆன்ட்ரூ ஜான் வரவேற்றார்.

விழாவில் பேசிய டீன் செந்தில் குமார், அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் தோற்றம், கடந்த ஆண்டுகளில் செய்த சாதனைகள், மாணவர்களின் வேலை வாய்ப்பு, விளையாட்டுத்துறையில் மாணவர்களின் சாதனை பற்றி எடுத்துரைத்தார்.

சிறப்பு விருந்தினராக சென்னை நீதிபதி பஷீர் அகமது செய்யது மகளிர் கல்லூரி பேராசிரியை பர்வீன் சுல்தானா கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளித்து பேசினார். இதில் 350-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்துகொண்டனர். முடிவில் கல்வி ஒருங்கிணைப்பாளர் வளர்மதி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை துறையின் நிர்வாக அதிகாரி சந்துரு மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News