புதுச்சேரி

கோப்பு படம்.

நல்ல பட்ஜெட் தாக்கல் செய்தால் ஒத்துழைப்பு தருவோம்-எதிர்கட்சித்தலைவர் சிவா பேச்சு

Published On 2023-01-28 08:54 GMT   |   Update On 2023-01-28 08:54 GMT
  • புதுவையில் 12 ஆண்டாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு முடிவு செய்தது.
  • கூட்டத்தில் நடப்பு நிதியாண்டில் துறைரீதியிலான நிதி ஒதுக்கீடு, செலவினங்கள், சம்பளம், ஓய்வூதியம் உட்பட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.

புதுச்சேரி:

புதுவையில் 12 ஆண்டாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு முடிவு செய்தது. பட்ஜெட் தொகையை இறுதி செய்வதற்கான மாநில திட்டக்குழு கூட்டம் தலைமை செயலகத்தில் நடந்தது.கவர்னர் தமிழிசை தலைமை வகித்தார்.

முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபி ரியங்கா, வைத்திலிங்கம் எம்.பி., எதிர்கட்சித்தலைவர் சிவா, தலைமை செயலர் ராஜீவ்வர்மா, கலெக்டர் வல்லவன், அரசு துறை செயலர்கள் பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நடப்பு நிதியாண்டில் துறைரீதியிலான நிதி ஒதுக்கீடு, செலவினங்கள், சம்பளம், ஓய்வூதியம் உட்பட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. பின்னர் வரும் நிதியாண்டு பட்ஜெட்டுக்கு ரூ.11 ஆயிரத்து 600 கோடி நிர்ணயிக்கப்பட்டது.

இதை மாநில திட்டத்துறை உறுதி செய்துள்ளது. இந்த வரையறை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். மத்திய அரசு ஒப்புதல் கிடைத்தவுடன் மார்ச் மாதம் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார்.

புதுவை மாநிலத்திட்ட க்குழுவில் எதிர்க்கட்சி த்தலைவர் சிவா பேசியதாவது:-

புதுவையில் 2 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. புதிய ஆட்சி வந்த பிறகு ஒரு தொழிற்சா லைக்கூட வரவில்லை. ஆயிரக்கணக்கான ஏக்கர் 20 ஆண்டுகளாக முடக்கி போட்டுள்ளோம். சிறப்பு பொருளாதார மண்டலம் கொண்டுவருவதாகக்கூறி நிறைய குழப்பங்கள் ஏற்பட்டன.

இப்போதும் நடை முறைக்கு வரவில்லை. புதுவை வளர்ச்சிக்கு புதிய தொழிற்சாலை கள்கொண்டு வந்து வேலைவாய்ப்புகளை உருவாக்குங்கள்.

புதுவையில் குடிநீர் பிரச்சினை அதிகரி த்துள்ளது. தமிழகத்தில் காவிரி குடிநீரை விழுப்புரம் வரை கொண்டு வந்துள்ளனர். தமிழக அரசுடன் பேசி குடிநீரை புதுவைக்கு கொண்டு வரலாம்.

ரேஷன் கடை இல்லாத மாநிலம் என்ற கெட்டப்பெயர் ஏன்.? திறக்க நடவடிக்கை எடுங்கள்.

புதுவையில் 25 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருந்தும் செலவுதான் அதிகமாகிறது. வேலையே ந டக்கவில்லை. ஒவ்வொரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும் தொகுதியை பிரித்து கொடுங்கள். சிறப்புக்கூறு திட்டத்தில் அம்மக்களுக்கு இடம் எடுத்து நிலம் தருவதில்லை. வாரியங்களால் மக்களுக்கு பயன் இல்லாத சூழல் உள்ளது.

புதிய தொழிற்கொள்கை யை உருவாக்கினால்தான் புதிய தொழிற்சாலைகள் வரமுடியும். மத்திய அரசின் பிரதிநிதி துணைநிலை ஆளுநர், பேரவைத்தலைவர் ஆகியோர் மூலம் கூடுதல் நிதியை பெறுங்கள். ஒத்துழைப்பு தருகிறோம். நல்ல பட்ஜெட் போடுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News