புதுச்சேரி
பயனாளிகளுக்கு அடையாள அட்டை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.
- அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்
- கட்சியினர் ரகுராமன்,லாரன்ஸ், மோரிஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
புதுச்சேரி:
புதுவை அரசு சமூக நலத்துறை மூலம் மாற்றுத் திறனாளிகளின் மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான அடையாள அட்டையை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ வழங்கினார்.
பயனாளிகளுக்கு நிதி உதவி அவர்களது வங்கிக் கணக்கில் மாதம் தோறும் செலுத்தப்படும்.
நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் சக்தி வேல், துணைத் தொகுதி செயலாளர் ஆரோக்கிய ராஜ், மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயக மூர்த்தி, கிளை செயலாளர் செல்வம் மற்றும் கட்சியினர் ரகுராமன், லாரன்ஸ், மோரிஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.