புதுச்சேரி

அன்பழகன்

44 ஆண்டுகளாக கட்சிக்கு சேவை செய்து வருகிறேன் - அன்பழகன் பேட்டி

Published On 2022-07-01 14:56 IST   |   Update On 2022-07-01 14:56:00 IST
  • அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக இருந்துகொண்டே சட்டசபையில் கருணா நிதியின் புகழை பாடியவர் ஓ.பன்னீர்செல்வம்.
  • அவர் எழுதிய புத்தகத்தை தனது டிரங்கு பெட்டியில் பத்திரமாக வைத்திருப்பதாக கூறினார். அவரின் மகன் ரவீந்திரநாத் எம்.பி.யை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க வைத்தார்.

புதுச்சேரி:

புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக இருந்துகொண்டே சட்டசபையில் கருணா நிதியின் புகழை பாடியவர் ஓ.பன்னீர்செல்வம். அவர் எழுதிய புத்தகத்தை தனது டிரங்கு பெட்டியில் பத்திரமாக வைத்திருப்பதாக கூறினார். அவரின் மகன் ரவீந்திரநாத் எம்.பி.யை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க வைத்தார்.

தமிழக மக்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வோடு ஸ்டாலின் செயல்படுவதாக அவர் கூறினார். தி.மு.க. என்ற தீய சக்தியை அழிப்பதற்காக எம்.ஜி.ஆர். உருவாக்கி, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இயக்கம் அ.தி.மு.க.

தி.மு.க.வோடு கள்ள உறவு வைத்திருப்பவர்கள் அ.தி.மு.க.வில் தொடர முடியாது. கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை நடத்தவிடாமல், ஓ.பன்னீர்செல்வம் பல தடைகளை செய்தார். இவற்றை முறியடித்து பொதுக்குழு நடந்தது. உள்ளாட்சி தேர்தலில் சின்னம் பெற கையெழுத்த போட வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பினார்.

கட்சியை முடக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அவர் அனுப்பிய கடிதத்தை எடப்பாடி பழனிசாமி புறக்கணித்துவிட்டார். வரும் 11-ம் தேதி பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார்.

என்னை பொறுத்தவரை அரசியலில் சில வியாபாரிகளை கொண்டு வந்தது மட்டும்தான் தவறு. அரசியல் முதலீடு செய்து லாபம் பெறக்கூடியது அல்ல. மேற்கு மாநிலத்தை சேர்ந்த 11 பொதுக்குழு உறுப்பினர்கள் என் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.

அதுமட்டுமின்றி முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கின்றனர். கட்சியின் தலைமைக்கு 4 பேர் போட்டியிடுகின்றனர். வெற்றி பெறுபவர்கள் தலைமையை ஏற்பேன் என கூறுவது அழகா? நான் எடப்பாடி பழனிசாமியை உறுதிபட ஆதரிக்கிறேன். அதேபோல மற்றவர்கள் யாரை ஆதரிக்கிறேன்? என சொல்வார்களா?

மேற்கு மாநிலத்தில் 65 சதவீதத்தினர் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கின்றனர். நான் ஒரே கட்சியில் 44 ஆண்டாக விசுவாசமாக பணியாற்றுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News