புதுச்சேரி

கோப்பு படம்.

எந்த மதத்துக்கும் எதிராக நான் கருத்து கூறவில்லை

Published On 2023-09-10 08:22 GMT   |   Update On 2023-09-10 08:22 GMT
  • கென்னடி எம்.எல்.ஏ. அறிக்கை
  • அ.தி.மு.க.மாநில செயலாளர் உண்மைக்கு புறம்பாக பேசுவது கண்டிக்கத்தக்கது.

புதுச்சேரி:

புதுவை தி.மு.க. மாநில துணை அமைப்பாளரும் உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான அனிபால் கென்னடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரு ப்பதாவது:-

சனாதனம் என்பது ஒரு மதத்திற்கு சொந்தமானது அல்ல. அது, எந்த மதத்தில் இருந்தாலும் ஏற்கக் கூடியதும் அல்ல. இது தொடர்பாக கவர்னருக்கு நான் தெரிவித்ததில், எந்த இடத்திலும் எந்த ஒரு மதமோ மற்றும் சாதியை குறித்து சொல்லவில்லை.

அ.தி.மு.க.மாநில செயலாளர் உண்மைக்கு புறம்பாக பேசுவது கண்டிக்கத்தக்கது.

கடந்த காலங்களில் வன் முறையை தூண்டிவிட்டு அரசியல் பிழைப்பு நடத்தியது யார் என்பது மக்களுக்கு தெரியும்.

சனாதனம் என்பது குறித்து அண்ணா கற்றுக் கொடுத்ததை அறியாமல் அண்ணா பெயரால் இயக்கம் நடத்துபவர்களும் அந்த இயக்கத்தின் பொறுப்புகளில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்து விட்டு பின்னர் தி.மு.க.விற்கு பதில் அளிக்கலாம்.

அண்ணாவின் கடமை, கண்ணியம் கட்டுப்பாடு என்ற தாரக நெறிகளை நெஞ்சில் ஏற்றி, இயக்கம் நடத்துவதால் அரசு விழாவில் சபை நாகரீகம் பதில் அளிக்கும் வகையில் அறிக்கையாக வெளியிட்டேன்.

அரசு விழாவில் முறையற்ற வகையில் நடப்பது போன்று நாகரிகம் அற்ற வகையில் நடக்க எங்களுக்கு எங்கள் இயக்கம் கற்றுக் கொடுக்கவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News