புதுச்சேரி
கோப்பு படம்
விடுதி ஊழியர் மயங்கி விழுந்து சாவு
- பணியில் இருந்த சதீஷ்குமார் திடீரென மயங்கி விழுந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து சதிஷ்குமார் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
விழுப்புரம் அருகே திருவாமதூரை சேர்ந்தவர் சதீஷ் குமார் வயது 32. திருமணமாக இவர் புதுவை சின்னக்காலாப்பட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதியில் (ரிசார்ட்) தங்கி ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் பணியில் இருந்த சதீஷ்குமார் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்த மற்ற ஊழியர்கள் சதீஷ்குமாரை மீட்டு ஆட்டோவில் கனக செட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும்வழியி லேயே சதிஷ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து விடுதி கேஷியர் தினகரன் காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சதிஷ்குமார் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.