புதுச்சேரி

மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் தோட்டக்கலை பாடப்பிரிவுகளில் முதலாம் ஆண்டு தொடக்க விழா நடந்த போது எடுத்த படம்.

தோட்டக்கலை முதலாம் ஆண்டு தொடக்க விழா

Published On 2023-09-21 13:51 IST   |   Update On 2023-09-21 13:51:00 IST
  • மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்றது.
  • செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் மற்றும் பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் வாழ்த்துறை வழங்கினர்.

புதுச்சேரி:

புதுவை மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் அமைந்துள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பாடப்பிரிவு தொடக்க விழா நடை பெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தக்சஷீலா பல்கலைக்கழக வேந்தரும் மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலான் இயக்குநர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுகுமாறன் செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் மற்றும் பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் வாழ்த்துறை வழங்கினர்.

கல்லூரியின் இயக்குனரும் மற்றும் முதல்வருமான டாக்டர் வெங்கடாசலபதி வரவேற்புரையாற்றினார்.

கல்லூரியின் பதிவாளர் அப்பாஸ் மொய்தின் தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார் அகாடமிக் டீன்கள் அன்புமலர் அறிவழகர் கல்லூரியின் ஆராய்ச்சித் துறை டீன் வேல்முருகன் வேலைவாய்ப்புத்துறை அதிகாரி கைலாசம் ஸ்கூல் ஆப் ஆக்கிடெச்சர் முதல்வர் மனோகரன் கலை அறிவியல் கல்லூரி டீன் முத்துலட்சுமி அலைடு ஹெல்து சயின்ஸ் டீன் கோபால், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை டீன் முகமது யாசின் சட்ட கல்வித்துறை டீன் சந்திர சேகர், பிசியோதெரபி டீன் சிதம்பரம், பார்மசி டீன் தனலட்சும் மற்றும் எஸ்.எம்.வி. முதல்வர் அனிதா உள்பட அனைத்து கல்லூரியின் துறைத்தலை வர்கள் பேராசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் வேளாண் கல்லூரியின் டீன் முகமது யாசின் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்பட 500-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News