புதுச்சேரி

புதுவையில் இன்று காலை பலத்த மழை பெய்தது. புஸ்சி வீதியில் தேங்கிய மழை வெள்ளத்தை படத்தில் காணலாம்.

புதுவையில் கனமழை சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்

Published On 2023-10-30 14:26 IST   |   Update On 2023-10-30 14:26:00 IST
  • இன்று அதிகாலை முதல் வானம் கருமேகங்கள் சூழ்ந்து மப்பும், மந்தாரமுமாக இருந்தது.
  • தொடர்ந்து லேசான மழை பெய்த வண்ணம் உள்ளது.

புதுச்சேரி:

புதுவையில் கடந்த 2 நாட்களாக லேசான மழை பெய்தது.

குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது. நேற்றைய தினம் வானிலை மாறி, மாறி இருந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை முதல் வானம் கருமேகங்கள் சூழ்ந்து மப்பும், மந்தாரமுமாக இருந்தது. இன்று அதிகாலையில் நல்ல மழை பெய்தது.

தொடர்ந்து லேசான மழை பெய்தது. காலை 9.30 மணியளவில் மழை கொட்டத்தொடங்கி யது. சுமார் அரைமணிநேரம் விடாமல் கனமழை பெய்தது. மழையால் புதுவை நகர சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

குளிர்ந்த காற்று

இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதன்பிறகும் தொடர்ந்து லேசான மழை பெய்த வண்ணம் உள்ளது. குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது.

Tags:    

Similar News