புதுச்சேரி

எல்லை காளியம்மன் கோவில் தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.

எல்லை காளியம்மன் கோவில் தேரோட்டம்- செடல் உற்சவம்

Published On 2023-08-02 14:28 IST   |   Update On 2023-08-02 14:28:00 IST
  • தொடர்ந்து பக்தரகள் அலகு குத்தியும் செடல் அணிந்தும் காவடி எடுத்தும் நேர்த்திகடன் செலுத்தினர்.
  • இக்கோவிலில் 26-ம் ஆண்டு ஆடி மாத தேரோட்டத் திருவிழா மற்றும் செடல் உற்சவவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

புதுச்சேரி:

புதுவை அருகே தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பூத்துறை செல்லும் வழியில் திருச்சிற்றம்பலம் கிராமத்தில் சுயம்பு எல்லை காளியம்மன் கோவில் உள்ளது.

பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத தேரோட்டம், செடல் உற்சவம் விமர்சையாக நடைபெறும். அதுபோல் இக்கோவிலில் 26-ம் ஆண்டு ஆடி மாத தேரோட்டத் திருவிழா மற்றும் செடல் உற்சவவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து விழா நாட்களில் இரவு அம்மன் வீதி உலா நடந்து வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா மற்றும் செடல் உற்சவ விழா நேற்று நடந்தது.

தேர் கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு விநாயகர் கோவில், ஏழைமாரி யம்மன் கோவில் வீதி வழியாக , இரும்பை சாலை சந்திப்பில் இருந்து மீண்டும் கோவிலை சென்றடைந்தது. அதனை தொடர்ந்து பக்தரகள் அலகு குத்தியும் செடல் அணிந்தும் காவடி எடுத்தும் நேர்த்திகடன் செலுத்தினர்.

இதில் புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி துணை சபாநாயகர் ராஜவேலு, கே.எஸ்.பி. ரமேஷ் எம்.எல்.ஏ., வானூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பி.கே.டி. முரளி, திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் புவனேஸ்வரி ராமதாஸ், காமாட்சி விஜயரங்கன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக மதியம் 12 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு மயானம் சென்று வல்லாளக்கண்டன் கோட்டையை அழித்தல் சூரசம்காரம் செய்தல் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு கும்பம் படைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. அதனை தொடர்ந்து கொஞ்சுமங்கலம் ஆசிரியர் அண்ணா துரையின் கேளிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை சுயம்பு எல்லை காளியம்மன் கோவில் ஸ்தாபகர் பாலகிருஷ்ணன் அடிகளார் தலைமையில் விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News