புதுச்சேரி

பட்டத்தை பிள்ளையார்குப்பம் ஸ்ரீ பாலாஜி வித்யாபீத்தின் துணைவேந்தர் பேராசிரியர் நிஹார் ரஞ்சன் பிஸ்வாஸ் வழங்கினார். அருகில் கல்லூரி முதல்வர் விஜயகிருஷ்ண ரபாகா மற்றும் பலர் உள்ளனர்.

ராஜீவ்காந்தி என்ஜினீயரிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

Published On 2023-09-11 14:53 IST   |   Update On 2023-09-11 14:53:00 IST
  • 1,379 மாணவர்கள் பட்டம் பெற்றனர்
  • ஸ்ரீ பாலாஜி எஜூகேஷனல் மற்றும் சாரிடபுள் டிரஸ்ட் தலைவர் ராஜகோபாலன் முன்னிலை வகித்தார்.

புதுச்சேரி:

புதுச்சேரி கிருமாம்பாக்கம் ராஜீவ்காந்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 2017,2018,2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில் கல்லூரியின் முதல்வர் டாக்டர் விஜயகிருஷ்ணரபாகா கல்லூரி ஆண்டு அறிக்கைசமர்பித்தார். ஸ்ரீ பாலாஜி எஜூகேஷனல் மற்றும் சாரிடபுள் டிரஸ்ட் தலைவர் ராஜகோபாலன் முன்னிலை வகித்தார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக பிள்ளையார்குப்பம் ஸ்ரீ பாலாஜி வித்யாபீத் பல்கலைக்கழக துணைவேந்தர் நிஹார் ரஞ்சன் பிஸ்வாஸ் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசசின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கல்வி இடைமுக திட்டத்தின் மண்டல தலைவர் கணேஷ் திருநாவுக்கரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.

மேலும் புதுவை பல்கலைக்கழக அளவில் முதல் மற்றும் சிறந்து விளங்கியவர்களுக்கு தங்கம், வெள்ளி பதக்கங்கள் வழங்கப்பட்டன.

2 அமர்வுகளாக நடந்த இந்த பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 1,379 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. விழாவில் கல்லூரியின் துணை முதல்வர் அய்யப்பன், தேர்வு கட்டுப்பாட்டாளர் சம்பத்குமார், பேராசிரியர் ரேணுகாதேவி மற்றும் பேராசிரியர்கள், கல்லூரி நிர்வாகத்தினர், மாணவர்கள் அவர்க ளின் பெற்றோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News