புதுச்சேரி

அகரம் ஸ்ரீ பாரத் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் டாக்டர்.சந்தானகிருஷ்ணன் தலைமையில் பட்டமளிப்பு மற்றும் பரிசளிப்பு விழா நடந்த காட்சி.

பாரத் வித்யாஷ்ரம் பள்ளியில் பட்டமளிப்பு விழா

Published On 2023-04-03 11:51 IST   |   Update On 2023-04-03 11:51:00 IST
  • புதுவை அகரம் ஸ்ரீ பாரத் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. மேல்நிலைப் பள்ளியில் பட்டமளிப்பு மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
  • அப்பள்ளியின் மழலையர்கள் தனது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் கண் கவரும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

புதுச்சேரி:

புதுவை அகரம் ஸ்ரீ பாரத் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. மேல்நிலைப் பள்ளியில் பட்டமளிப்பு மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர்.சந்தானகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முதல் நாளில் மழலையார் மாணவ ர்களுக்கான பட்டமளிப்பு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கண் டாக்டர் வீனா, புதுவை அறிவியல் மன்ற துணைத் தலைவி ஹேமாவதி, மற்றும் ஜெயசுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிறப்புரை ஆற்றினார்கள்.

தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் மழலையர் மாணவர்களுக்கு பட்டமளித்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். அதனைத் தொடர்ந்து அப்பள்ளியின் மழலையர்கள் தனது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் கண் கவரும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

2-வது நாளான நேற்று பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வாழ்க்கைத் திறன் பயிற்சியாளர் மற்றும் ஊக்கமளிப்பு பேச்சாளர் புகழேந்தி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார்.போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இறுதியில் பள்ளியின் முதல்வர் சாந்தி ஜெயசுந்தர் மேற்பார்வையில் நிகழ்ச்சி யானது நடைபெற்றது.

Tags:    

Similar News