புதுச்சேரி

கோப்பு படம்.

இலவச அரிசிக்கான 3 மாத பணம் வழங்க கவர்னர் ஒப்புதல்

Published On 2023-07-21 14:31 IST   |   Update On 2023-07-21 14:31:00 IST
  • குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு ரூ.5.20 லட்சம் மானியம் வழங்கவும் கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.
  • விதைசான்று முகமைக்கு ரூ.51 லட்சம் மானியம், மகளிர் மேம்பாட்டு கழகத்திற்கு ரூ.5 1/4 லட்சம் மானியம் வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுச்சேரி:

புதுவை கவர்னர் தமிழிசை பல்வேறு அரசின் கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

பண்டசோழநல்லூர் அரசு நடுநிலைப்பள்ளிக்கு திருவருட்பிரகாச வள்ளலார் அரசு நடுநிலைப் பள்ளி என பெயர் மாற்றவும், ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவ கல்லூரியில் தேர்வு செய்யப்பட்ட உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கும், புதுவை மாநில சமூகநல வாரியத்துக்கு ரூ.6 3/4 லட்சம் மானியம் வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஏனாம் நகராட்சிக்கு ரூ.42 லட்சம் மானியம், ராஜீவ்காந்தி விளையாட்டு பள்ளிக்கு ரூ.56 லட்சம் மானியம், புதுவை விஸ்வகர்மா சமுதாய ஐந்தொழிலாளர் சங்கத்துக்கு ரூ.2 1/4 லட்சம் மானியம், விதைசான்று முகமைக்கு ரூ.51 லட்சம் மானியம், மகளிர் மேம்பாட்டு கழகத்திற்கு ரூ.5 1/4 லட்சம் மானியம் வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும் வக்பு வாரியத்துக்கு ரூ.30 லட்சம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வரைநிலை மேம்பாட்டு கழக்திற்கு (பாட்கோ) ரூ.2 கோடி மானியம், காரைக்கால் மார்க்கெட் கமிட்டிக்கு ரூ.47 லட்சம் வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளார். அரசின் இலவச அரிசி திட்டத்துக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாத இலவச அரிசிக்கு பணம் வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஜவகர் சிறுவர் இல்லத்துக்கு பகுதிநேர பயிற்றுநர் நியமனம், கரியமாணிக்கம் கிராமத்தில் குடிநீர் மேம்பாட்டு பணி செலவுக்கு ரூ.3.20 கோடி, குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு ரூ.5.20 லட்சம் மானியம் வழங்கவும் கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

இலவச அரிசிக்கான பணமாக சிகப்பு ரேஷன்கார்டுதாரர்களுக்கு ஒரு மாதத்திற்கு ரூ.600 வீதம், 3 மாதத்திற்கு ரூ.ஆயிரத்து 800, மஞ்சள் கார்டுதாரர்களுக்கு ஒரு மாதத்திற்கு ரூ.300 வீதம் 3 மாதத்திற்கு ரூ.900 பயனாளிகள் வங்கிகணக்கில் விரைவில் செலுத்தப்பட உள்ளது.

Tags:    

Similar News