புதுச்சேரி

கோப்பு படம்.

பெரிய மார்க்கெட் வியாபாரிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்

Published On 2023-07-28 08:27 GMT   |   Update On 2023-07-28 08:27 GMT
  • முன்னாள் எம்.பி. கண்ணன் வலியுறுத்தல்
  • பெரியமார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளை முழுமையாக கவனத்திலும், நம்பகத்தன்மையோடும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை முன்னாள் எம்.பி. கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பெரியமார்க்கெட்டை ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் நவீனப்படுத்த அரசு விரும்புவதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இந்த விஷயத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, பெரியமார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளை முழுமையாக கவனத்திலும், நம்பகத்தன்மையோடும் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கூறும் கருத்துக்களை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமையாகும்.

இந்த விஷயத்தில் வேறு விதமான கவுரவ பிரச்சினை ஏதும் இருக்க தேவையில்லை. அனைத்து எதிர்கட்சிகளும் இதே கருத்தையே வெளிப்ப டுத்தி உள்ளனர்.

புதுவை அரசு உடனடியாக பெரி யமார்க்கெட் வியாபாரிகளின் கூட்டத்தை கூட்டி, கலந்துபேசி நல்ல முடிவெடுப்பதே ஒரு ஸ்மார்ட்டான செயல்பாடாக இருக்கும் என்பதை அரசுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News