புதுச்சேரி

கோப்பு படம்.

அரசு ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-03-22 11:04 IST   |   Update On 2023-03-22 11:04:00 IST
  • புதுவை அருகே அரியாங்குப்பம் காக்கையன்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராதாகண்ணன் காளி. இவர் மத்திய அரசின் ஓய்வு பெற்ற ஊழியர்.
  • ராதாகண்ணன் காளிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.

புதுச்சேரி:

புதுவை அரியாங்குப்பம் காக்கையன்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராதாகண்ணன் காளி. இவர் மத்திய அரசின் ஓய்வு பெற்ற ஊழியர். இவரது மனைவி கோமதி (வயது60). இவர்களது சொந்த ஊர் சென்னை சுற்றுக்கேணியாகும். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.

ராதாகண்ணன் காளிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் எதிர்வீட்டில் வசிக்கும் நபர் வெளியூருக்கு செல்லும் போது சாவியை கொடுத்து விட்டு செல்வது வழக்கம்.

சம்பவத்தன்று ராதாகண்ணன் காளி எதிர் வீட்டிலேயே தூங்க சென்றார். அப்ேபாது அளவுக்கு அதிகமாக மது குடித்த ராதாகண்ணன் காளி மின்விசிறியில் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் அவரது மனைவி கோமதி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News