புதுச்சேரி

முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்த நாளையொட்டி லாஸ்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் என்.ஆர்.காங்கிரஸ் சிறப்பு அழைப்பாளர் நந்தா ஜெயஸ்ரீதரன் ஏற்பாட்டில் அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடத்திய காட்சி.

சுப்பிரமணிய சாமி கோவிலில் தங்க தேர் இழுத்து வழிபாடு

Published On 2023-08-01 14:42 IST   |   Update On 2023-08-01 14:42:00 IST
  • அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமையில் தங்க தேர் இழுக்கப்பட்டது.
  • சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.

புதுச்சேரி:

முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்தநாளையொட்டி இன்று லாஸ்பேட்டை சட்டமன்ற தொகுதி லாஸ்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் என்.ஆர் காங்கி ரஸ் மாநில சிறப்பு அழைப்பாளர் நந்தா ஜெயஸ்ரீதரன், என்.ஆர் காங்கிரஸ் பிரமுகர் நந்தா பூவராகவன் ஏற்பாட்டில் அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமையில் தங்க தேர் இழுக்கப்பட்டது.

இதில் கே.எஸ்.பி. ரமேஷ் எம்எல்ஏ, என்.ஆர் காங்கிரஸ் செயலாளர் என்.எஸ். ஜெயபால், முன்னாள் எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன், என்.ஆர் காங்கிரஸ் பிரமுகர்கள் நாராயணசாமி, அழகு என்ற அழகானந்தம், வேல்முருகன், செண்பகா அசோகன், நரசிம்மன் தினகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சுப்பிர மணியசாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு பூர்ண கும்பம் மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆயிரம் பேருக்கு அன்ன தானம் வழங்கும் நிகழ்ச்சியை ரங்கசாமி தொடங்கி வைத்தார். 

Tags:    

Similar News