புதுச்சேரி

பயிற்சி முகாமை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்து பேசிய காட்சி. அருகில் பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், செல்வகணபதி எம்.பி. உள்ளனர்.

வாக்காளர்களை வீடுதேடி சென்று சந்திக்க வேண்டும்

Published On 2023-08-22 10:58 IST   |   Update On 2023-08-22 10:58:00 IST
  • தனியார் ஒட்டலில் வாக்காளர் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.
  • பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினருமான நமச்சிவாயம் தொடங்கி வைத்து பேசினார்.

புதுச்சேரி:

புதுவை மாநில பா.ஜனதா நிர்வாகிகளுக்கு காமராஜ் சாலையில் உள்ள தனியார் ஒட்டலில் வாக்காளர் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.

முகாமுக்கு பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். முகாமை உள்துறை அமைச்சரும், பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினருமான நமச்சிவாயம் தொடங்கி வைத்து பேசினார்.

அவர் பேசும்போது, பா.ஜனதா நிர்வாகிகள் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்திக்க வேண்டும். வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பயிற்சி முகாமில் செல்வகணபதி எம்.பி. பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார், மாநில துணை தலைவர்கள் தங்க.விக்ரமன், செல்வம், ரவிச்சந்திரன், முருகன், முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான், நளினி கணேஷ், மாநில செயலாளர் நாகராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

மாநிலம் முழுவதும் உள்ள நிர்வாகிகள், தொகுதி தலைவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News