திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த செல்வகணபதி எம்.பி.க்கு புதுவை தமிழ்ச்சங்கதலைவர் முத்து சால்வை அணிவித்து வரவேற்ற காட்சி.
null
- புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட 4-ம் ஆண்டை முன்னிட்டு அவரது சிலைக்கு செல்வ கணபதி எம்.பி. மாலை அணிவித்து திருக்குறள் கூறினார்.
- இதில் பொற்செழியன், மணி, சாது.அறிமாவளவன், திருக்குறள் சண்முகம், சாதனையாளர் வெங்கடேசன் மற்றும் தமிழறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட 4-ம் ஆண்டை முன்னிட்டு அவரது சிலைக்கு செல்வ கணபதி எம்.பி. மாலை அணிவித்து திருக்குறள் கூறினார்.
தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து தலைமை தாங்கினார். தமிழ்ச் சங்கச் செயலர் சீனு.மோகன்தாசு வரவேற்றுப் பேசினார்.
இதில் பொருளாளர் திருநாவுக்கரசு, துணைத்தலைவர்கள் ஆதி கேசவன், பாலசுப்ரமணியன், துணைச் செயலாளர் அருள்செல்வம், போலீஸ் சூப்பிரண்டு (ஓய்வு) பாலகிரு ஷ்ணன்ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உசேன், சீனு. கந்தகுமார், தினகரன், சிவேந்திரன்,, கவிஞர்.சொற்கோ, கலாம் விதைகள் விருட்ச தலைவர் ராஜா, பொற்செழியன், மணி, சாது.அறிமாவளவன், திருக்குறள் சண்முகம், சாதனையாளர் வெங்கடேசன் மற்றும் தமிழறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.