புதுச்சேரி

கோப்பு படம்.

பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்

Published On 2023-03-01 04:39 GMT   |   Update On 2023-03-01 04:39 GMT
  • கடந்த 2010-ம் ஆண்டு முதல் புதுவை அரசின் கீழ் மாகியில் இயங்கி வருகின்ற அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூயிலிருந்து ஆண்டுக்கு சுமார் 50 மருத்துவர்கள் படிப்பு முடித்து வெளிவருகின்றனர்.
  • ஆயுர்வேத சிகிச்சை மையங்களை திறக்க செயல் திட்டத்துடன் நிதி ஒதுக்கீட்டை வருகிற 2023-2024 பட்ஜெட் உரையில் இடம் பெற செய்ய வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க பொது செயலாளர் முருகானந்தம் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு அனுப்பி யுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2010-ம் ஆண்டு முதல் புதுவை அரசின் கீழ் மாகியில் இயங்கி வருகின்ற அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூயிலிருந்து ஆண்டுக்கு சுமார் 50 மருத்துவர்கள் படிப்பு முடித்து வெளிவருகின்றனர். அதில் 50 சதவீத மாணவர்கள் நம் புதுவை மாநிலத்தை சார்ந்தவர்களாக இருக் கின்றார்கள் அவர்க ளுக்கான வேலை வாய்ப்பு, மற்றும் எதிர்காலம் குறித்து இது நாள் வரையிலும் எந்தவித திட்டமிடுதல் இல்லாதது அதிர்ச்சியூட்டும் நிகழ்வாக உள்ளது.

மத்திய அரசு ஆயுஸ்மான் திட்டத்தை நாடு முழுவதும் நடைமுறைபடுத்தி வருகின்ற நிலையில் புதுவை அரசும் அண்டை மாநிலங்களில் உள்ளது போல் சுற்றுலா துறையில் ஒருங்கிணைந்த ஆயுர்வேத சிகிச்சை மையங்களை திறக்க செயல் திட்டத்துடன் நிதி ஒதுக்கீட்டை வருகிற 2023-2024 பட்ஜெட் உரையில் இடம் பெற செய்ய வேண்டும்.

மேலும் வில்லியனூரில் கட்டி வரும் ஆயுர்வேத மருத்துவ மனையை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டு வர வேண்டும். இவைய னைத்தையும் வருகிற பட்ஜெட் உரையில் இடம் பெற செய்து 300-க்கும் அதிகமான ஆயுர்வேத மருத்துவர்களின் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News