புதுச்சேரி

கோப்பு படம்.

அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் விலகல்

Published On 2023-10-27 13:08 IST   |   Update On 2023-10-27 13:08:00 IST
  • இயக்கத்தின் ஆன்மா மறைந்துவிட்டது என கடிதம்
  • எனக்கு அவர்கள் பணித்த அறிவார்ந்த செயல்கள் அனைத்தையும் அவரது திருப்திக் கேற்ப செய்து முடித்தேன்.

புதுச்சேரி:

புதுவை மாநில அ.தி.மு.க. இணை செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான பேராசிரியர் ராமதாஸ் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பதவி விலகல் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் மற்றும் எனக்கு சமீபத்தில் அளித்த இணைச் செயலா ளர் பதவியில் இருந்து விலகிக் கொள்கி றேன்.

இதனை எனது ராஜி னாமா கடிதமாக ஏற்றுக் கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

முன்னாள் தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலி தாவின் சொந்த அழைப்பி னாலும் என் மீது அவர் காட்டிய அன்பினால் அவரது சமூக நீதி மற்றும் மக்கள் நல கொள்கைகளாலும் அவரது தலைமையை ஏற்று கட்சியில் சேர்ந்து பணியாற்றினேன். எனக்கு அவர்கள் பணித்த அறிவார்ந்த செயல்கள் அனைத்தையும் அவரது திருப்திக் கேற்ப செய்து முடித்தேன்.

அவரது மறைவு எனக்கு பெருத்த அதிர்ச்சியை அளித்தது. இயக்கத்தின் ஆன்மாவே மறைந்து விட்டதாக நான் உணர்கிறேன். இந்த நிலையில் புதுவையையும் அதன் மக்களையும் சார்ந்துள்ள பிரச்சினை களைத் தீர்ப்பதற்கு வாய்ப்பில்லை என்று எனக்குத் தோன்றுகிறது.

எனவே இந்த ராஜினாமா கடிதத்தை தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். நான் கட்சியில் இருந்த போது என்னோடு பணியாற்றிய தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், ஆகிய அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு பேராசிரியர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Tags:    

Similar News